ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (20:54 IST)

ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

rohit sharma
இந்திய கிரிக்கெட் அணி, 212   ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும்  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன், விராட் கோலி டக் அவுட், சிவம் டுபே 1 ரன், சஞ்சு சாம்சன் 0 ரன்னுடன் அவுட்டாகினர்.

எனவே  பொறுப்பை உணர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 69 பந்துகளில்  சதம் கடந்து, 121 ரன்கள் குவித்தார்.    அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த, ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 39 பந்துகளுக்கு 69  ரன்கள் குவித்தார்.

துவக்க வீரர்கள் 4 பேரை இழந்து திணறிய நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சிங்கு சிங்கின் திறமையான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, 20  ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212   ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தரப்பில், அஹ்மது 3 விக்கெட்டும், ஓமர்ஷாய் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்னும் சிறிது  நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.