1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (13:33 IST)

ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு.. சென்னையில் ஃபைனல்..!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ப்ளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஐபிஎல் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன என்பதும் அதனை அடுத்து ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மே 21ஆம் தேதி அகமதாபாத்தில் குவாலிஃபயர் ஒன்று,  மே 22ஆம் தேதி அகமதாபாத்தில் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனை அடுத்து மே 24ஆம் தேதி சென்னையில் குவாலிஃபயர் 2 மற்றும் 26 ஆம் தேதி சென்னையில் இறுதி போட்டி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்த நான்கு போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரூபி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கும், மற்றவர்களுக்கு 21ஆம் தேதி மாலை 6:00 மணிக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இறுதி போட்டியை காண விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
Edited by Siva