வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 13 மே 2024 (14:46 IST)

கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை.! சென்னையில் 10 பேர் கைது.!!

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே  நேற்று ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது 
 
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

 
இந்நிலையில்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெடுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.67,100 மதிப்புள்ள 27 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.