ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது
முதல் ஒருநாள் போட்டி நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 225 ரன்கள் எடுத்தது.
எனவே வெற்றிக்கு 226 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் புனிதா 75 ரன்களும், ரோட்ரிகஸ் 41 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டெய்லர் 94 ரன்களும் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதை அடுத்து ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.