1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bumrah was hit six after 4400 deliveries

பும்ரா பந்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்ஸர்… அடித்து நொறுக்கிய இளம் வீரர்!

இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது.

தற்போது 116 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இவர் பும்ரா வீசிய ஏழாவது  மற்றும் 11 ஆவது ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 4400 பந்துகளுக்குப் பிறகு 1445 நாட்களுக்குப் பிறகு பும்ரா பந்தில் ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.