புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:32 IST)

மகளிர் உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா !

வெற்றிக்களிப்பில் இந்திய மகளிர் அணி

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிர் அணிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறது. இன்று நியுசிலாந்தோடு மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 133 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் ஷபாலி வெர்மாவின் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொல்லிகொள்ளும்படி ரன்கள் சேர்க்கவில்லை.

இந்நிலையில் அதன் பின் களமிறங்கிய நியுசிலாந்து அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்கள் சேர்க்க முடியாமல் கட்டுப்படுத்தினர். இதனால் அந்த அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது அதிரடியில் புகுந்த நியுசிலாந்து வீராங்கனை அமேலியா கெர். 18 ரன்களை 19 ஆவது ஓவரில் சேர்த்தார்.

கடைசி ஓவரில் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட 5 பந்துகளில். இரண்டு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்க்கப்படன. கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில்ம் ஜென்சன் ரன் அவுட் ஆனதால்  இந்தியா 4 ரன்கள் வித்தியாச்த்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.