ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (19:36 IST)

மகளிர் உலகக்கோப்பை: 98 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

98 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!
மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் நைட் 108 ரன்களும் சீவர் 59 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்தநிலையில் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 98 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது 
 
இதேபோல் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 125 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டிகளுக்கு பின் புள்ளிகள் பட்டியலில் ஏ பிரிவில் இந்தியா முதலிடத்திலும், பி பிரிவில் இங்கிலாந்து முதல் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது