புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:07 IST)

சீனாவிலிருந்து மேலும் 112 பேர் வருகை: புறப்பட்டது விமானம்!

சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 112 பேரை அழைத்துக் கொண்டு புறப்பட்டது இந்திய விமானம்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. கடந்த மாதம் பல இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் சிலரை மீட்பதற்காக இந்திய விமானம் சீனா சென்றது.

சீனாவுக்கு தேவையான முக கவசங்கள், மருந்து பொருட்களை 40 டன் அளவில் எடுத்து சென்ற விமானம் அதை சீன அரசிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கு சிக்கியிருந்த 76 இந்தியர்கள் உட்பட 112 பேரை அழைத்துக்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளது.

இந்தியா வரும் அவர்கள் 14 நாட்கள் மருத்துவ முகாமில் கண்காணிக்கப்பட்டு பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.