1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India America Agreement signed

இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது என்னென்ன??

இந்தியா
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை தொடர்ந்து, சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ் மஹால், காந்தி நினைவிடம் ஆகியவற்றை தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் படி, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி, ரோமியோ ஆகிய ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
அரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி !