வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (08:40 IST)

கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு யாரும் வரக்கூடாது! – போலீஸார் குவிப்பு!

டெல்லியில் உள்ள ‘கேட்வே ஆப் இந்தியாவில் டெல்லி வன்முறையை கண்டித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என அரசு எச்சரித்துள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையால் டெல்லி போர்க்களமாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தை கண்டித்து கேட்வே ஆஃப் இந்தியாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட வருமாறு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியுள்ளது. இதனால் மக்கள் அந்த பகுதியில் குவியக்கூடும் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே மெரின் ட்ரைவில் போராட்டம் நடத்த முயற்சி செய்த போராட்டக்காரர்கள் சிலரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.