செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (13:05 IST)

2வது ஒரு நாள் போட்டி: வெற்றியை தக்க வைக்குமா இந்திய அணி?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2வது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.
 
இதையடுத்து இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி கடந்த 21ந் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணியும், தோல்வியிலிருந்து மீண்டு வர வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறது. 1.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில்  யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.