ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

hockey
Last Modified சனி, 20 அக்டோபர் 2018 (12:01 IST)
ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது.
 
மஸ்கட்டில் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே இந்திய அணி ஓமன் அணியுடன் மோதி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் போட்டியின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டி இரவு 10.40 மணிக்கு நடைபெற இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :