1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (14:58 IST)

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
 
மஸ்கட்டில் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே இந்திய அணி ஓமன் அணியுடன் மோதி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் சூழ்நிலையை சுதாரித்துக் கொண்ட இந்திய வீரர்கள், சிறப்பாக விளையாடி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.