1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 மார்ச் 2018 (18:45 IST)

இறுதிப் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய முடிவு

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய  முடிவுசெய்துள்ளது.
இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விளையாடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய 4 போட்டிகளில் விளையாடி இந்திய அணி மூன்று வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் வங்காளதேச அணி இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வங்காளதேச அணி இந்திய அணியிடம் தோல்வி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணியுடன் மோதுகிறது.