1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 மார்ச் 2018 (18:49 IST)

கடைசி ஓவரில் ஏற்பட்ட பரபரப்பு; கண்ணாடி உடைப்பு; அபராதத்துடன் தப்பிய கேப்டன்

நேற்று வங்களாகதேசம் - இலங்கை இடையே நடைபெற்ற டி20 போட்டியில் கடைசி ஓவரில் வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 
 
வங்காளதேசம் மற்றும் இலங்கை அணி தலா ஒரு வெற்றியுடன் நேற்று மோதின. இதில் வெற்றி பெற்றும் அணி இறுதி போட்டிக்கு செல்லும். இதனால் நேற்றைய ஆட்டம் மிக சுவாரசியமாக இருந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி கடைசி ஓவரில் த்ரீல் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகள் பவுன்சர் ஆக வங்காளதேச வீரர்கள் நோ பால் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் தர மறுத்துவிட்டார். லெக் சைடில் இருந்த நடுவர் நோ பால் கொடுத்துள்ளார். இதனால் வங்காளதேச வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இலங்கை வீரர்களும் வங்காளதேச வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேப்டன் ஷகிப் அல் ஹசான் மைதானத்துக்கு வந்து வீரர்கள் திரும்ப அழைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இவை எல்லாம் நடந்து முடிந்து ஒருவழியாக வங்காளதேச வீரர்கள் திரும்ப வந்து விளையாடினார். 19.5 ஓவரில் முகமதுல்லா சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். 
 
இதனிடையே டிரெஸிங் அறையில் கண்ணாடி உடைந்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசான் வங்காளதேச வீரர்களை திரும்ப அழைத்த போது அவர்கள் சென்றனர். அந்த சமயத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வங்காளதேச வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மேலும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசான் அபராதத்துடன் தப்பினார். இறுதி போட்டியில் விளையாட தடை விதிக்கப்படவில்லை.