திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (08:13 IST)

இலங்கை vs வங்கதேசம்: கடைசி ஓவரில் ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பரபரப்பு

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்த போட்டியின் கடைசி ஓவரில் இரு அணி வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டாது

வங்கதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இலங்கை அணியின் உதானா பந்துவீச வந்தார். ஆனால் அவர் முதல் இரண்டு பந்துகளையும் தோள்பட்டைக்கு மேல் சென்றது. இரண்டாவது பந்தை லெக் அம்பயர் நோபால் என்று அறிவித்தார், ஆனால் அதனை கவனிக்காமல் அம்பயர் முஸ்தபாபிசிரை அவுட் என அறிவித்தார். இதனால் நடுவருக்கும் மஹ்முதுல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நோபால் என அறிவிக்க வேண்டும் என்று அவர் வாக்குவாதம் செய்தார்

அந்த சமயத்தில் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த பங்களாதேஷ் மாற்றுவீரர் ஒருவருக்கும், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளுமுள்ளு செய்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை டிரெஸ்ஸிங் அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனது வீரர்களை வெளியேறுமாறு கூறினார். ஆனால் அணியினர் அவரை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. மஹ்முதுல்லா 4,2,6 என ரன்கள் அடுத்தடுத்த மூன்று பந்துகளில் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். வெற்றிக்கு பின்னர் வங்கதேச அணியினர் பாம்புபோல் நடனம் ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.