வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (10:41 IST)

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராஜ்நாத் சிங் எங்கே?

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இந்தியவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவருக்கு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. 
 
காஷ்மீர் அருகே இருக்கும் பூன்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். காஷ்மீர் தொடர்பான பிரச்சைனை இந்தியா பாகிஸ்தான் இடையே வெகு நாட்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது எல்லை மீறி தாக்குதல்களும் நடைபெறுகிறது.
 
இந்நிலையில், நேற்றுதான் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது, காஷ்மீர் இன்றும் இந்தியாவுக்குத்தான், எதிர்காலத்திலும் இந்தியாவிற்குத்தான். காஷ்மீரை காப்பாற்ற தேவைப்பட்டால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார் எனபது குறிப்பிடத்தக்கது.