வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (09:02 IST)

உலகக்கோப்பை காலிறுதியில் இந்திய அணி வெற்றி !

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையின் காலிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரையிலான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 233 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கீழ் படிய வைத்தனர்.

ஆஸி கார்த்திக் தியாகி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. இடையில் பேட்ரிக்-21 மற்றும் ஸ்காட்-35 ஆகியோர் சிறிது நேரம் தாக்குப் பிடித்து நம்பிக்கை அளித்தாலும் அவர்களால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இதனால் நிலையில் 43.3 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் கார்த்திக் தியாகி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மற்றொரு காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வரும் 31 ஆம் தேதி விளையாட உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.