1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India require another 252 runs with 7 wickets remaining

35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா! 287 இலக்கை எட்டுமா?

india
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது.

இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டன. முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய கேப்டன் விராத் கோஹ்லி, முரளிவிஜய் மற்றும் ராகுல் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டதால் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது

இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்டுக்களை கைவசம் வைத்திருக்கும் இந்திய அணிக்கு வெற்றிக்கு தேவையான 252 ரன்களை எடுக்குமா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்
தொடரை இழந்தது இந்தியா: தென் ஆப்ரிக்காவிடம் அடிபணிந்த சோகம்!