1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (09:32 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 4வது தங்கம் வாங்கி கொடுத்த சிங்கப்பெண்கள்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது  துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து நான்காவது தங்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடுதல் பிரிவில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டன் பிரிவில் ஈஷா சிங், ரிதம் சங்வான் மற்றும் மனு பாக்கர்ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் என்றது. 
 
இதனை அடுத்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva