1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (17:21 IST)

71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

ind vs zim
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி குரூப் 2 பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர் 
 
இதனை அடுத்து 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது 
 
இன்றைய போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்
 
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva