புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (22:32 IST)

3வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 185 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இதனையடுத்து இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது