செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (17:33 IST)

தூய்மை இந்தியா திட்டம்: சென்னை மாநகராட்சிக்கு தேசிய விருது!

தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது தூய்மை இந்தியா. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குப்பைகளை எடுத்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 
 
புதுமைகள் மற்றும் அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் என்ற பிரிவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது