செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (20:03 IST)

மூன்றாவது போட்டியிலும் திணறும் இந்திய அணி

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி மூன்றாவது
டெஸ்ட் போட்டியிலும் தடுமாறி வருகிறது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
 
முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி டெஸ்ட் போட்டி தொடரை கைப்பற்றியது, முதல் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இரண்டாவது போட்டியில் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

 
புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த சர்மா சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேவாக், கவாஸ்கர் உள்ளிட பல இந்திய முன்னணி வீரர்கள் கோலியின் முடிவை விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. 

இந்திய அணி பவுலிங் நன்றாக இருந்தாலும் பேட்டிங்கில் சொதப்பியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி மட்டும் தனியாக போராடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் வழக்கம் போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கோபமடைந்து பேசியது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. வீரர்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்னரும் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அனுபவம் உள்ள ரகானேவை அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 
 
தவானுக்கு பதில் ராகுல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார். தவானுக்கு பதில் வேறு யாரைவது நீக்கி இருக்கலாம் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.

 
இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. தொடரை இழந்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். இரண்டு போட்டிகளின் தோல்வி எதிரொலி மூன்றாவது போட்டியிலும் வீரர்களை மாற்றியமைக்க செய்துள்ளது.

தற்போது ரோகித் சர்மாவுக்கு பதில் ரகானே, அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
தொடக்க வீரர்களான விஜய் மற்றும் ராகுல் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களின் ஜோடி இந்திய அணி சற்று வீழ்ச்சியின் பாதையில் இருந்து மீட்டெடுத்தது. புஜாரா தடுப்பாட்டத்தில் களமிறங்கினார். 
 
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து கலமிறங்கிய ரகானே 9 ரன்களில் வெளியேறினார். புஜாரா 50 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்திய அணி தற்போது 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது.