1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (14:31 IST)

ஆரம்பமே அதிர்ச்சி; 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3டி20 ஆகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிரது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முத; இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 
 
இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்களான விஜய் 8 ரன்களுடனும், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் மைதானத்தை விட்டு வெளியேறினர். தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர்.