வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (16:29 IST)

IND - ENG 2 வது டெஸ்ட்; ரோஹித் சர்மா சதமடித்து புதிய சாதனை..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிவருகிறது.

 டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த புஜாரா நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி  சதம் அடித்தார். இது அவருக்கு  7 வது சதமாகும். புஜாரா 14 ரன்களும் கேப்டன் கோலி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் வந்த அஜிங்க்யே ரஹானே ரோஹித்துடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்நிலையில் ரோஹித் சர்மா தற்போது 150 ரன்கள்( 208 பந்துகள்) விளாசினார். பின்னர், 161 (231)ரன்கள் அடித்தபோது, ஜாக் லீச் பந்தில் ரோஹித் ஆட்டமிழந்தார்.

மேலும் ரோஹித் சர்மா ஒரு மிகப்பெரும்  சாதனை படைத்துள்ளார்.

அதாவது, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகள் ஆகிய 3 வித ஃபார்மட்டிலும் சதம் அடித்துள்ள ஒரே வீரர் என்ற சதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

மேலும் இந்தியா தற்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.