1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Joffra archer ruled out from second test

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல் – பிராட் வருகை!

ஆர்ச்சர்
சென்னையில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
இருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார்.


இங்கிலாந்து அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாம் டெஸ்ட்டில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே விளையாடும் வீரர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களாக ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இணை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அடுத்த முறை அவரிடம் கவனமாக இருப்போம்… பண்ட் பற்றி பேசிய ஆஸி பந்து வீச்சாளர்!