1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (13:03 IST)

சதமடித்த ரோகித் : அதிரடி ஆட்டத்தில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்  தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார்.

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 7 ஆவது சதத்தை அடித்தார் ரோகித் சர்மா. இந்தச் சதத்தில் 14 பவுண்டர்களும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.