வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (23:52 IST)

மகளிர் ஐபிஎல்: அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய இரண்டு அணிகள்..!

Women IPL
மகளிர் ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் உத்தரபிரதேச அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இதன் காரணமாக புள்ளி பட்டியலில் பின்தங்கி இருந்த குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி, இரண்டாம் இடத்தில் மும்பை மூன்றாம் இடத்தில் உத்தர பிரதேச அணி ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
வரும் வெள்ளி அன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகள் மோதும். அதன் பிறகு இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி முதல் இடத்தில் உள்ள அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்பதும் இறுதி போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran