1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified திங்கள், 20 மார்ச் 2023 (17:25 IST)

மகளிர் ஐபிஎல்: உபி அணிக்கு 179 ரன்கள் இலக்கு கொடுத்த குஜராத்..!

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி ஆரம்பிப்பதற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. கார்ட்னர் மிக அபாரமாக விளையாடிய 60 ரன்கள் எடுத்தார். 
 
இந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் உத்தர பிரதேச அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குஜராத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு பள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது 
 
உத்தரபிரதேச அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது/ இன்றைய போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran