வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (08:39 IST)

மகளிர் ஐபிஎல்: தொடர் தோல்வி அடைந்த பெங்களூருக்கு தொடர் வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

மகளிர் ஐபிஎல் போட்டி தொடரில் தொடர் தோல்வி அடைந்த பெங்களூர் அணி தற்போது தொடர் வெற்றி பெற்று வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய மகளிர் ஐபிஎல் போட்டி தொடரில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது என்பதும் இதனால் பெங்களூர் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குஜராத்-பெங்களூர் அணிகளுக்கு இடையான போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்றது. குஜராத் அணி 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 189 என்ற இலக்கை 15.3 ஓவர்களில் பெங்களூர் அணி எடுத்தது என்பதும் குறிப்பாக அந்த அணியின் சோபி 36 பந்துகளில் 99 ரன்கள் அடித்து ஆட்ட நாயகி விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டு போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற இடத்தை பெங்களூர் அணி தற்போது நான்கு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
 
Edited by Siva