மகளிர் ஐபிஎல்: கடைசி ஓவரில் உபி அணி த்ரில் வெற்றி..!
மகளிர் ஐபிஎல் போட்டி தொடரில் இன்று குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதி வந்த நிலையில் உத்தரப்பிரதேச அணி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்கையில் திரில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 179 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய உத்தர பிரதேச அணி 19.5 ஓவரில் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேச அணி 8 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குஜராத் அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய தோல்வியுடன் எட்டாவது தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva