செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (13:20 IST)

இதை பற்றி பிரதமர் மோடியிடம்தான் கேட்க வேண்டும்! – நழுவிய கங்குலி

இந்தியா – பாஜிஸ்தான் இடையே மீண்டும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு நைஸாக பிரதமரை கைக்காட்டி விட்டு நழுவியுள்ளார் கங்குலி.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றது முதல் பலர் அவரது செயல்பாடுகளை கவனிக்க தொடங்கியுள்ளனர். இதுவரை பிசிசிஐ செய்யாத பல விஷயங்களை அவர் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா பல நாடுகளுடன் மோதும் டெஸ்ட் தொடர்களில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுவது இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்தான். ஆனால் கடந்த 2012க்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே டெஸ்ட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இஅடியே அரசியல்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் தொடர்கள் நடைபெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கங்குலி பொறுப்பேற்றுள்ளதால் இந்த தொடரை மீண்டும் நடத்த அவர் முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பதிலளித்த கங்குலி “இந்த போட்டியை நடத்துவது என் கையில் இல்லை. பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எடுக்கும் முடிவுகளில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் தனக்கு ஆர்வம் இருந்தாலும் அந்தந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அனுமதியின்றி இது சாத்தியமாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.