மோடி - சீன அதிபர் பார்வையிட்டு ரசித்த மண்டபம் இடிந்தது !
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து பல்லவர் காலத்தில் கட்டபெற்ற கலை நுட்பம் வாய்ந்த இடம் உலகமெங்கும் பிரபலம் ஆனது. தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்து செல்ஃபி எடுத்த வண்ணமாக உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியும் சீன அதிபரும் பார்வையிட்டு வியந்து ரசித்த ஒரு மண்டபத்தில் உள்ள ஒரு பகுதி நேற்று பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது. இப்பகுதிதான் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்த போது கட்டுப்பாட்டு அறையாகச் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
ஆனால் பெரிய அளவுக்கு எதுவும் சேதமில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அப்பகுதி சரிசெய்யப்படும் என தெரிகிறது.