வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:33 IST)

இன்று முதல் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் தொடக்கம்: முதல் போட்டி எந்தெந்த அணிகளுக்கு?

இன்று முதல் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் தொடக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்களை போலவே ஒவ்வொரு ஆண்டும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடைபெற்று வருவது தெரிந்ததே. கடந்த 6 ஆண்டுகளாக இதுவரை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டிகளை அடுத்து தற்போது 7-வது ஆண்டாக இன்று தொடங்க உள்ளது என்
 
கொரோனா அச்சத்தின் காரணமாக ரசிகர்களுக்கு இந்த போட்டியை காண அனுமதி இல்லை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாவில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரளா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டி போலவே ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும் என்பதும் லீக் சுற்று முடிவடைந்த பின்னர் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் நடைபெறும் முதலாவது கால்பந்து போட்டி தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மொத்தம் 115 போட்டிகள் நடைபெறும் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 போட்டிகள் அதிகம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கும் நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வரையிலான லீக் ஆட்டங்களின் அட்டவணை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது