1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK meeting today by OPS and EPS

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை: அதிமுகவில் பரபரப்பு

ஓபிஎஸ்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் தற்போது தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் மற்றும் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஆலோசனை செய்ய உள்ளனர். இதில் அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் தேர்தலை சந்திப்பது எப்படி? கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை நடத்துவது எப்போது? என்பது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இடி மின்னலுடன் இன்று மழை: தென்மாவட்ட மக்களே கவனம்!