செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:27 IST)

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களும் சில பாதிக்கப்பட்டனர் என்பதும் இவர்களில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஏற்கனவே அதிமுக திமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது
 
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ்செல்வன் என்பவருக்கு உறுதியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன