புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated: புதன், 18 ஜூலை 2018 (15:44 IST)

தோனி ஓய்வு பெறுகிறாரா? ரசிகர்களை குழப்பத்தில் தள்ளிய நிகழ்வு

நேற்றைய போட்டியில் நடந்த நிகழ்வு ஒன்று தோனி ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 போட்டி தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டி தொடரில் தோல்வி அடைந்தது.
 
நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் தோல்வி அடைந்ததன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. போட்டி முடிந்த பெரும்பாலும் வெற்றி பெற்ற அணி ஒரு ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வது வழக்கம்.
 
ஆனால் நேற்றையை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையிலும், தோனி நடுவர்களிடம் பந்தை கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார்.
 
இந்த வீடியோ காட்சியை பார்த்த பின் ரசிகர்கள் பலரும் தோனி ஓய்வு பெற போகிறாரா என்ற சந்தேகத்தில் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார்.