புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified திங்கள், 3 அக்டோபர் 2022 (13:58 IST)

விராத் கோஹ்லியுடன் செல்பி எடுக்க ரூ.23,000 செலவு செய்த ரசிகர்!

virat fan
விராத் கோஹ்லியுடன் செல்பி எடுக்க ரூ.23,000 செலவு செய்த ரசிகர்!
விராட் கோலியை நேரில் சந்தித்து அவருடன் செல்பி எடுக்க அவரது ரசிகர் ஒருவர் 23 ஆயிரம் செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன 
 
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிரான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் விராத் கோஹ்லியின் தீவிர ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டு மென்பதற்காக  கவுகாத்திக்கு சென்று அவர் தங்கியிருந்த அதே ஓட்டலில் தங்கி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விராட் கோலியை சந்தித்து செல்பி எடுத்துள்ளார் 
 
இதற்காக அவர் மொத்தம் 23 ஆயிரம் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு பணம் பெரிது இல்லை என்றும் விராத் கோலியுடன் செல்பி எடுத்தது எனக்கு மிகுந்த மனதிற்கு என்றும் அவர் பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Edited by Mahendran