ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

Last Updated: வியாழன், 1 ஜூலை 2021 (11:19 IST)

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் அனாசயமாக இலங்கையை ஊதித்தள்ளியது இங்கிலாந்து. அதன் பின்னர் நேற்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை தட்டுத்தடுமாறி 185 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலில் ஆக்ரோஷமாக விளையாடினாலும் ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோ ரூட் நிதானமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார். சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இதில் மேலும் படிக்கவும் :