1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா

India
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தினசரி பாதிப்புகள் மீண்டும் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,04,11,634 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1005 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,99,459 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,23,257 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் முட்டைகோஸ்...!!