ஜோரூட் 180 நாட்-அவுட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் விபரம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 391 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி உள்ளது
ஏற்கனவே இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டம் காரணமாக இந்திய அணியின் ஸ்கோரை விட 27 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் 18 பவுண்டுகள் என்பதும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை இன்று விளையாட உள்ளது. இன்றும் நாளையும் மட்டுமே போட்டி இருக்கும் நிலையில் 2வது இன்னிங்சை இந்த இரண்டு நாட்களில் முடிந்து வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சுதாரித்து விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் அல்லது டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது