திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:59 IST)

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்- கமல்ஹாசன் டுவீட்

இந்தியா சுதந்திரம் பெற்று நாளையுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. எனவே 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.