திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (22:52 IST)

IND -ENG 2 வது டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் சதம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இன்று இங்கிலாந்து கேப்டன் ரூட் இன்று சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், தற்போது 2 வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து கேப்டன் ரூட் இன்று சதம் அடித்து அசத்தினார்.

மேலும், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வலுவான நிலையிலுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சாரளர் சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ரூட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.மேலும் ரூட் தற்போது 170 ரன்களுடன் ஆடி வருகிறார். இங்கிலாந்து அணி சற்று முன்வரை 9 விக்கெட் இழப்பிற்கு 376  ரன்கள் குவிந்து 12 ரன்கள் முன்னிலை வகிக்கிறது