புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (10:21 IST)

இந்த சீசனில் நான் ஒன்றும் செய்யவில்லை… வெற்றிக்குப் பின் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளஸ்சிஸ்ஒரு ரன்னில் அவுட்டாகி போதிலும் ருத்ராஜ் மற்றும் உத்தப்பா மிக அபாரமாக விளையாடினர். கடைசியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து தான் ஒரு ஃபினிஷர் என்பதை உறுதி செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய தோனி ‘நான் இந்த சீசனில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வலைகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன். அதனால் அதிகமாக யோசிக்கவில்லை, யோசித்தால் திட்டங்களைப் போட்டு குழப்ப வேண்டிவரும். கடந்த சீசனில் நாங்கள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் சென்றோம். ஆனால் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டோம். அதன் பலனைதான் இந்த சீசனில் அனுபவிக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.