1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (06:49 IST)

திரில் வெற்றி பெற்ற சென்னை: ஃபினிஷர் தோனி விளாசல்

ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே முதல் பிளே ஆப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து டெல்லி அணி பேட்டிங் செய்தது
 
அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் பிரித்விஷா மிக அபாரமாக விளையாடி 60 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளஸ்சிஸ்ஒரு ரன்னில் அவுட்டாகி போதிலும் ருத்ராஜ் மற்றும் உத்தப்பா மிக அபாரமாக விளையாடினர். கடைசியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து தான் ஒரு ஃபினிஷர் என்பதை உறுதி செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.