கடைசி பந்து வரை டென்ஷன் ஆன போட்டி.. போராடி தோல்வி அடைந்த குஜராத்..!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டியில் கடைசி வரை போராடிய குஜராத் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் அபார பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்தது
இந்த நிலையில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் மட்டுமே எடுத்ததால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் 8 ரன்கள், ஐந்தாவது பந்தில் ஆறு ரன்கள், எடுத்ததால் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது
ஆனால் கடைசி பந்தில் ரன் ஏதும் அடிக்காததால் குஜராத் அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva