தோனியின் மதிப்பை கணித்த நிகில் சோப்ரா
2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியின் வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில் தோனியை தேர்வு செய்ய கடும் போட்டி இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ரா கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இதனால் தோனி புனே அணியில் களமிறங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் இல்லாததால் ஐபிஎல் ரசிகர்கள் பெரும்பாலும் குறிப்பாக தமிழக ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்தது.
இரண்டு ஆண்டு தடை முடிந்து வரும் 2018ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது. சென்னை அணியின் கேப்டன் தல தோனி மீண்டும் சென்னை அணியில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில் தோனி இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தோனிக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில் வரும் ஐபிஎல் போட்டியில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில் தோனியை தேர்வு செய்ய கடுமையான போட்டி இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ரா தெரிவித்துள்ளார்.