1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (21:45 IST)

தோனிக்கு பத்ம பூஷன்: பிசிசிஐ பரிந்துரை!!

தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல முறை இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார்.


 
 
36 வயதாகும் தோனி, இதுவரை 302 ஒருநாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 78 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
 
அதோடு, டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றையும் பெற்று தந்த ஒரே இந்திய வீரர் ஆவார்.
 
முன்னதாக ஆர்ஜீனா விருது, ராஜிப் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை தோனி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் மூன்றாம் நிலையில் உள்ள பதம் பூஷன் விருதுக்கு தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
 
பத்ம புஷன் விருது தோனிக்கு வழங்கப்பட்டால், இந்த விருதை பெரும் 11 வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை பெறுவார்.