ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (20:16 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில், இங்கிலாந்திடம் தோற்றதால், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.

பின்னர், பிசிசிஐ, புதிய தேர்வுக் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதற்காக, அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா ஆகிய  3 பேர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது.
chettan sharma

இந்தக் குழு அளிந்த பரிந்துரையின் பேரில் சேத்தன் சர்மா  மீண்டும் தேர்வுக் குழுவின் தலைராக நியமித்துள்ளது பிசிசிஐ.

சேத்தன் சர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.